Home PC-Workshop Tamilische-Schule Software&Mp3 sites Vilamparangal Tamil-News Wichtige Info

[Contact]
[Anzeige]
[Geburtstage]
[Hochzeiten]
[Todesanzeige]

கான்சரை குணப்படுத்தும் 17 வயது தமிழ் டாக்டர் !!666

கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் என்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார்.

அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது.

சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள்.

அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அபிக்குமரனால் தமிழ் இனத்துக்கே பெருமை என்றால் அது மிகையாகாது.

இடைவெளி விடாமல் தினமும் உறவு கொண்டால் செக்ஸ் அதிகரிக்கும் – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

இடைவெளி விடாமல் தினமும் செக்ஸ் உறவு கொண்டால் செக்ஸ் அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.கணவன்-மனைவி இடையே திருமணமான சில நாட்களுக்கு செக்ஸ் உறவு மிக அதிகளவில் இருப்பது வழக்கம். பின்னர் சிறிது சிறிதாக உறவு கொள்ளும் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் செக்ஸ் உறவு என்றால் இவ்வளவுதானா என்ற அலுப்பும் சலிப்பும்தான்.தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் தம்பதிகளிடையே சண்டை நோய் களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களை எல்லாம் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர். அதற்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர்.

இதனால் மாதவிடாய் நாட்கள் உட்பட இடைவெளிகளை இதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா டாக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் கூறுகையில் “நாட்கள் இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர்.
ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு வளமான விந்து உருவாக உதவுகிறது.தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் செக்ஸ் உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.
ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில் 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது என்றார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

பனிக்காலத்தில் உடலை பாதுகாப்பது எப்படி?

மார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. சூரிய ஒளி குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்றுக் குறைவாகவே இருக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய
ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக ‘வைரஸ்’ நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும்.

இந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொண்டையில் டான்ஸில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. இன்னும் இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா ஜூரம், ஒற்றைத் தலைவலி ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. அதோடு இந்த மாதிரியான பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகி விடுகிறது.

காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் ஜூரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன.

சரி, நம் உடலை எப்படி பாதுகாப்பது?

1. நல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள்.

2. வெதுவெதுப்பான சுடுதண்­ணீரில் குளிக்கவும்.

3. பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளுங்கள்.

4. மூக்கை கைகுட்டையால் மூடிக் கொள்ளுங்கள்.

5. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

6. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாயைத் திறந்து பேசிக்கொண்டே வண்டி ஓட்டாதீர்கள்.

7. தும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், மூக்கிலிருந்து வடியும் நீரிலும் அதிக அளவு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவை உடனே அருகில் இருக்கும் நபர்களைத் தாக்கி பரவும். மற்றவர்கள் நலன் கருதி, கைகுட்டை, கைதுண்டு இல்லாமல் இருக்காதீர்கள்.

பொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

கம்பளியினாலான கையுறை அணியுங்கள். மாலை ஆனதும் காலுறை அணியுங்கள். சற்று இறுக்கமான ஆடைகள் அணிந்துக் கொள்ளுங்கள்.

மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள்.

பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்­ணீரைப் பயன்படுத்துங்கள்.

பன், பிரெட் போன்ற பேக்கரி ஐட்டங்களையும், சுவீட்களையும் வாங்கிய அன்றே உண்ண வேண்டும். இல்லையெனில் அதன் மேல் உருவாகும் பூஞ்சக்காளான்களால் வாந்தி, பேதி உண்டாகும்.

பொதுவாக பனிக்காலத்தில் தோல் வறண்டு விடும்.

உதடுகள் வெடிக்காமலிருக்க வெண்ணெய், நெய், கிளிசரின், பாலேடு, லிப்கார்டு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.

பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தப்படுத்திக் கொள்ள பழக்குங்கள்.

மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 45 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.

 

Zurück ] Nach oben ] Weiter ]